Read Time:1 Minute, 20 Second
திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றவுடன் அவருக்கு Core Cell எனப்படும் முதல்வர் தனிப் பாதுகாப்புப் பிரிவின் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. அதனடிப்படையில் முதலமைச்சராக பதவியேற்ற பின் ஸ்டாலின் செல்லும் வாகனத்திற்கு முன்னும் பின்னும் இரண்டு பாதுகாப்பு வாகனங்கள் என்ற வீதம் நான்கு பாதுகாப்பு வாகனங்கள் செல்லும். தமிழக காவல்துறையின் முதலமைச்சர் தனிப் பாதுகாப்புப் பிரிவினர் அளிக்கும் 24 மணி நேர சுழற்சி முறை பாதுகாப்பும் வழங்கப்படவுள்ளது.
ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்த இசட் பிரிவு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்ட நிலையில், தற்போது அவர் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதால் மீண்டும் உள்துறை அமைச்சம் அவருக்கு இசட் ப்ளஸ் அல்லது இசட் பிரிவு பாதுகாப்பை வழங்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.