0 0
Read Time:1 Minute, 41 Second

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஜங்கிள்பட்டியில் முத்துராஜ் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருடைய தாய் பழனியம்மாளும் என்பவரும் முத்துராஜுடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மதுப்பழக்கம் உள்ள முத்துராஜ் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்துள்ளார்.

இதனால் அவருடைய தாய் பழனியம்மாள் முத்துராஜை கண்டித்துள்ளார். இதனையடுத்து கோபமடைந்த முத்துராஜ் வீட்டில் உள்ள கடப்பாறையை எடுத்து பழனியம்மாளின் தலையின் மீது ஓங்கி அடித்துள்ளார். அதன்பின் பலத்த காயம் அடைந்த பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழனியம்மாளின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்துராஜா கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %