0 0
Read Time:5 Minute, 21 Second

செம்பனார்கோவில், மே-07;
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம் முடிகண்டநல்லூர் ஊராட்சியில் உள்ள ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் நெகிழி அரவை அலகினை மாவட்ட ஆட்சியர் இரா,லலிதா தலைமையில் செய்தியாளர் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க, மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம் முடிகண்டநல்லூர் ஊராட்சியில் நெகிழி அரவை அலகு ரூ.508693 மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் 57 ஊராட்சிகள் உள்ளது. ஒவ்வொரு ஊராட்சியில் இருந்தும் தினசரி ஊராட்சியில் உள்ள தூய்மை காவலர்கள் துப்புறவு பணியாளர்களால் கேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை என தரம் பிரிக்கப்பட்டு மக்காத குப்பையில் உள்ள நெகிழி பேப்பர்கள், நெகிழி பாட்டில்கள் முதலானவை ஒவ்வொரு ஊராட்சியிலிருந்து முடிகண்டநல்லூர் நெகிழி அலகிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அரைக்கப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் ஊரக பகுதியில் அமைக்கப்படும் தார்சாலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. தார்சாலை அமைக்கும் பணியில் தார் உருக்கப்படும்போது அதனுடன் சேர்ந்து உருக்கப்படுவதால் பிளாஸ்டிக் உருக்கப்பட்டு ஜல்லியுடன் நன்கு ஒட்டி தார்சாலை மிகவும் தரமானதாக அமைகிறது. அரைக்கப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் ரூ.35-க்கு ஊரக பகுதிகளில் சாலை அமைக்கும் ஒப்பந்ததார்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. நெகிழி இல்லாத தமிழகத்தை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் ஊராட்சி பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு ஆங்காங்கே போடப்படும் பிளாஸ்டிக் பேப்பர்கள், பாட்டில்கள் நீர்நிலைகளில் சேர்ந்து நிர்வழி பாதையில் அடைப்பதில் இருந்தும், பல்வேறு சுற்றுசூழலில் கேடுகள் விளைவிப்பதில் இருந்தும் பாதுகாக்கப்பட்டு ஊராட்சிகள் குப்பைகள் இன்றி சுத்தமாக சுகாதாரமாக செயல்பட வழிவகுக்கிறது. இந்த நெகிழி அரவை அலகு அமைக்கப்பட்டதினால் இந்த ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகள் ஆங்காங்கே பிளாஸ்டிக் கவர்கள் இல்லாமல் சுத்தமாக காணப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் அலகினை மாவட்ட நிர்வாகம் செவ்வந்தி மகளிர் சுய உதவி குழுவிடம் இந்த நெகிழி அரவை அலகினை ஒப்படைத்ததன் மூலம் மகளிர் சுய உதவி குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு தினசரி வேலை கிடைக்கிறது. சொந்த ஊராட்சியிலேயே மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் இந்த நெகிழி அலகில் வேலை செய்து தங்களது குடும்பத்திற்கு நல்ல வருமானம் ஈட்டி பொருளாதாரத்தில் மேம்பட்டு வருகின்றனர். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இறுதியாக வாழ்வாதாரத்திற்கு ஒரு தொழிலினை ஏற்படுத்தி கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியருக்கு மகளிர் குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைஇயக்குனர் முருகண்ணன், செம்பனார்கோயில் ஒன்றியக்குழுத் தலைவர் நந்தினி ஸ்ரீதர், மயிலாடுதுறை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) அஸ்வின்குமார், முடிகண்டநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.சுமதி, செம்பனார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.மஞ்சுளா(வ.ஊ), ஜெ.விஜயலட்சுமி (கி.ஊ) ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %