0 0
Read Time:2 Minute, 58 Second

குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய்களை துப்புரவுப் பணி மேற்கொள்ளாததால் இந்த அவலநிலை அடிக்கடி தொடர்கிறது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு. பேருந்து நிலையத்தில் வரும் பொதுமக்கள் மூக்கைப் பொத்திக் கொண்டு போகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சாக்கடை கால்வாய் கழிவு நீரால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் வழுக்கி விழும் அபாயம்

குறிஞ்சிப்பாடியல் நேற்று இரவு கோடை கால மழை பெய்ததில் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் கால்வாயில் ஓடுகின்ற சாக்கடைக் கழிவுகள் பேருந்து நிலையத்தில் மிதந்தன இதனால் பேருந்து நிலையம் வரும் மக்கள் மூக்கைப் பொத்திக் கொண்டு போகும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. இதைப்பற்றி பேருந்து நிலையம் வரும் பொதுமக்கள் கூறுகையில் குறிஞ்சிப்பாடி முழுவதும் உள்ள சாக்கடை கால்வாய்களை சரியான முறையில் தூர்வாரப்படாமல் இருப்பதாலும் அப்படியே தூர்வாரினாலூம் அந்த கழிவுகளை அதே இடத்தில் பல நாட்களாக கிடக்கின்றது.

மீண்டும் அதே கழிவுகள் கால்வாயில் போய்ச் சேருகின்றன அடிக்கடி சிறு மழை பெய்தாலும் இதுபோன்ற கால்வாயில் உள்ள கழிவுகள் சாலையிலும் பேருந்து நிலையத்திலும் அதிக மழை பெய்தால் வீட்டிற்குள்ளும் கழிவுநீரில் நுழைந்து விடுகிறது அடிக்கடி இது போன்ற அவல நிலை குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் தொடர்ந்து வருகிறது. குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் குறிஞ்சிப்பாடியில் உள்ள அனைத்து வார்டுகளில் உள்ள சாக்கடை கால்வாய்களை தூர்வாரி பராமரிக்க வேண்டும் எனவும் கால்வாயில் ஓடும் கழிவுகள் மற்றும் கழிவுநீர் மற்றும் கழிவுகள் நகரப்பகுதியை கடந்து செல்ல சரியான கால்வாய்களை அமைத்து கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %