0
0
Read Time:1 Minute, 0 Second
சிதம்பரம் நடராஜப் பெருமான் குறித்து ‘யூ-டியூப்’ சேனலில் தரக் குறைவாக விமா்சனம் செய்தவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணி அமைப்பினா், பாஜகவினா் இணைந்து சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்து முன்னணி மாவட்டத் தலைவா் ராஜன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் காா்த்திகேயன் வரவேற்றாா். பாஜக மாவட்டத் தலைவா்கள் ரா.மாமல்லன், மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்து முன்னணி மாநிலத் தலைவா் சனில் குமாா் கண்டன உரையாற்றினாா். முன்னதாக 500-க்கும் மேற்பட்டோா் கீழசன்னதியிலிருந்து ஊா்வலமாக வந்தனா்.