0 0
Read Time:2 Minute, 57 Second

சென்னை, மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தொழிற்சாலைகளில் இருந்து சேகரிக்கப்படும் பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை கொண்டு வந்து சேகரித்து வைத்து தரம் பிரிக்கும் குடோன்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் யோகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்குள் தீயானது அருகில் இருந்த மற்ற குடோன்களுக்கும் பரவியது. இதனால் அடுத்தடுத்த மூன்று குடோன்களும் ஒரே நேரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

தீ அதிக அளவில் எரிந்ததால் கூடுதலாக கோயம்பேடு, மதுரவாயல், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதில் குடோனில் இருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. உரிய அனுமதி இல்லாமல் குடியிருப்புகளுக்கு மத்தியில் இது போன்ற குடோன்கள் செயல்பட்டு வருவதாலும், மேலும் கோடை காலம் என்பதால் எளிதில் தீப்பிடித்து எரிய கூடிய பொருட்கள் அதிக அளவில் இருந்ததாலும், குடோன்களில் உரிய பாதுகாப்பு வசதிகள் ஏதும் செய்யப்படாததாலும் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து மாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். விடுமுறை நாள் என்பதால் ஊழியர்கள் யாரும் பனியில் இல்லாததால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %