0
0
Read Time:1 Minute, 6 Second
வெளிநாட்டிலிருந்து நன்கொடையாக பெறப்படும் கோவிட்-19 நிவாரண பொருட்களுக்கு ஐஜிஎஸ்டியிலிருந்து தற்காலிக விலக்கு.
சுங்கத்துறை கடந்த மாதம் 30 ஆம் தேதி வெளியிட்ட திருத்தப்பட்ட அறிவிப்பு படி, ரெம்டெசிவிர் / ஏபிஐ மற்றும் பீட்டா சைக்ளோடெக்ட்ரின், பரிசோதனைக் கருவிகளுக்கு 2021 அக்டோபர் 31ம் தேதி வரையும், கடந்த மாதம் 24ம் தேதி வெளியிடப்பட்ட சுங்க அறிவிப்பின்படி மருத்துவ ஆக்ஸிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள், கிரையோஜெனிக் டேங்கர்ஸ் போன்ற ஆக்சிஜன் சிகிச்சை தொடர்பான சாதனங்கள் மற்றும் கோவிட் 19 தடுப்பூசிகளுக்கு 2021 ஜூலை 31ம் தேதி வரையிலும் சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.