0
0
Read Time:1 Minute, 0 Second
நாகையில், 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
வெளிப்பாளையம், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறி உள்ளது.
இந்த புயலுக்கு அசானி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து நாகை துறைமுகத்தில் கடந்த 7-ந் தேதி 1- எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.