0 0
Read Time:2 Minute, 2 Second

சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் மத்திய தொழிற்படை போலீசார் ஈடுபட்டு உள்ளனர். மத்திய தொழிற்படையினர் உடைமைகள், வாகன சோதனை போன்ற பாதுகாப்பு பணிக்காக மோப்ப நாய்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விமான நிலைய பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழிற்படை போலீசார் 2 நாய் குட்டிகளை சேர்த்து உள்ளனர். இந்த மோப்பநாய் குட்டிகள் பிறந்து 86 நாட்களான பெல்ஜிய மாலினோயிஸ் வகையை சேர்ந்தது.

இந்த நாய் குட்டிகள் மோப்ப சோதனைக்காக 6 மாத பயிற்சிக்கு பெங்களூருவில் உள்ள பயிற்சி கல்லூரிக்கு அனுப்பப்படுகிறது. அங்கு இவற்றுக்கு, வெடி பொருட்களை கண்டறியும் பணிக்கான மோப்ப பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இதையடுத்து நாய் குட்டிகளுக்கு பெயர் சூட்டும் விழா நடந்தது. மத்திய தொழிற்படை போலீஸ் டி.ஐ.ஜி. ஸ்ரீராம் தலைமை தாங்கினார். தென் மண்டல விமான நிலைய ஆணையக இயக்குனர் மாதவன் முன்னிலை வகித்தார்.

2 நாய் குட்டிகளுக்கு வீரா, பைரவா என இந்திய விமான நிலைய ஆணையக விஜிலென்ஸ் தலைமை அதிகாரி அமல் கார்க், சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் பெயர் சூட்டி உடைகளை அணிவித்தனர். நாய் குட்டிகளுக்கு மாலை அணிவித்து பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %