0 0
Read Time:2 Minute, 53 Second

கடலூர், கலெக்டர் ஆய்வு; நீர்வளத்துறை மூலம் கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா சிறப்பு தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது.

இதில் புவனகிரி அருகே பெரியப்பட்டு வாய்க்கால் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.9 லட்சத்து 70 ஆயிரம் செல விலும், அரியகோஷ்டி வாய்க்கால் 2.60 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.8 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டிலும், மேல் புவனகிரி மானம்பார்த்தான் வாய்க்கால் 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.9 லட்சத்துக்கு 70 ஆயிரம் மதிப்பீட்டிலும் தூர்வாரி கரைகள் பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணி களை துரிதமாக முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள சிவகாமசுந்தரி ஓடை 2.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.11 லட்சம் மதிப்பீட்டிலும், உசுப்பூர் வாய்க்கால் 3.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.4 லட்சம் மதிப்பீட்டிலும் தூர் வாரி கரைகள் பலப்படுத்தும் பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்-அமைச்சர் 2022-23-ம் ஆண்டிற்கான காவிரி டெல்டா பகுதியில் தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதன் வாயிலாக கடலூர் மாவட்டத்தில் 122 பாசன வாய்க்கால்கள், 31 வடிகால்கள் தூர் வாரப்படுவதன் மூலம் 58,655 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். ஆகவே இந்த பணிகளை விரைந்து முடித்து விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார்.

ஆய்வின் போது செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) காந்தரூபன், உதவி செயற்பொறியாளர்கள் பாலமுருகன், அருணகிரி, உதவி பொறியாளர்கள் குமார், ரமேஷ், முத்துக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %