0 0
Read Time:1 Minute, 50 Second

கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் மீனவர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு – புதுச்சேரி மீனவர் வாழ்வுரிமை இயக்க நிறுவன தலைவர் பெரு.ஏகாம்பரம் தலைமை தாங்கினார்.

மாநில பொதுச்செயலாளர் தங்கேஸ்வரன் வரவேற்றார். கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநில மீனவ கிராம பஞ்சாயத்தார், படகு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், மீன் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

துணை தலைவர் அருள்தாஸ், மாநில பொருளாளர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மீனவர்களின் விசைப்படகு மற்றும் பைபர் படகுகளுக்கு டீசல் மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மீனவர் வாழ்வுரிமை இயக்க நிர்வாகிகள், மீன் வியாபாரம் செய்யும் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் லோட்டஸ்முருகன் நன்றி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %