சித்திபுத்தி விநாயகர் கோயில் மற்றும் பெரியபாளையத்து அம்மன் கோயிலில், திருப்பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்திபுத்தி விநாயகர் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார், அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் நகர்ப்புற பகுதிகளில் கோயில்களை புனரமைக்க 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சித்திபுத்தி விநாயகர் கோயிலும், பெரியபாளையத்து அம்மன் கோயிலிலும், திருப்பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறக்கூடிய முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ள துணை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் நேரடியாக சென்று விசாரணை செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்த அவர், இந்த மாத இறுதிக்குள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். மேலும் அதிகாரிகளை ஆய்வு செய்ய விடாமல், இருப்பதை பதிவு செய்துள்ளோம் என்றும், சட்டபூர்வமாக அவர்கள் மீது படி படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.