0 0
Read Time:1 Minute, 38 Second

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்தநிலையில் திருக்கடையூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

அவர்கள் தாகத்தை தணிக்க குளிர்பானங்கள், பழச்சாறு போன்றவற்றை வாங்கி குடித்து வருகின்றனர். மேலும், திருக்கடையூர் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் விற்கப்படும் உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கையும் ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுகின்றனர்.

இதனால், நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. மாத்தூர், கண்ணங்குடி, கிள்ளியூர், டி.மணல்மேடு, பிள்ளைபெருமாநல்லூர், ஆக்கூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நுங்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %