கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுகாதாரத் துறையினர் பரிசோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில் புதிதாக 381 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் டெல்லி, பெங்களூர், விஜயவாடா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்த 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இதனையடுத்து சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 62 பேருக்கும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 297 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 28 ஆயிரத்து 695 பேர் வீடு திரும்பியுள்ளனர் எனவும் 329 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பலியாகி உள்ளனர் எனவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ள பட்டியலில் கூறப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து 1678 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனையிலும் 250 பேர் வெளி மாவட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் சுகாதார துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் 86 பகுதிகள் கொரோனா பாதிக்கபட்டுள்ள பகுதியாக கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளன எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.