மயிலாடுதுறை, மே- 12;
மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஏ.வி.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேலாயுதம் அரங்கத்தில் தமிழ்நாடு அரசின் மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்தும் அனைத்து கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டியை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினருமான திரு.எஸ்.ராஜகுமார், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ஹாஜா கனி ஆகியோர் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தொடங்கி வைத்தார்.
பேச்சுப்போட்டியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உன்னதாமான தலை நிமிரும் தமிழகம் என்பதற்கு இணங்க மொழிப்பற்று, இனப்பற்று முன்னெடுத்து இன்றைய இளைய சமுதாயம் முன்னேற வேண்டும். இன்றைய இளம் சமுதாயம் நாளைய சமூகத்தின் தூண் ஆவார்கள். இன்றைய காலக்கட்டத்தில் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னுதாரனமாக திகழ்கிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்க்ள பதவியேற்றவுடன் தமிழ்தாய் வாழ்த்து வாய்வழியாக பாட வேண்டும் என அரசாணை வெளியிட்டர்கள், இதனால் அரசு நிகழ்ச்சிகளில் அனைவரும் தமிழ்தாய் வாழ்த்துப் பாடலை வாய்வழியாக பாடுகின்றனர். மேலும் போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்தாய் வாழ்த்து மிகவும் அவசியம், அப்பாடலின் அர்தத்தையும் புரிந்துக்கொண்டு பொருளின் அர்தத்தையும் புரிந்துக்கொண்டு போட்டித் தேர்வுகளுக்கு படிக்க வேண்டும்.
மேலும், நாம் செய்தி தாள்கள், புத்தகங்கள் ஆகியவற்றை படிக்க படிக்க அறிவு வளரும், அதை வைத்து பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கும் வாழ்கையில் மேண்மை அடைவதற்க்கும் உறுதுணையாக அமையும். பள்ளி கல்லூரியில் படிக்கும்போதே பேச்சுபோட்டி உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அறிவு வளர சமூக சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் அனைவரும் நாளைய சமுதாயத்தை சிறந்த முறையில் உருவாக்க வேண்டும்.
நேர்முக தேர்வுகளுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்டவைகள் அவசியமான ஒன்று. அதிகளவில் நாளிதழ்களையும், புத்தகங்களையும் படிக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில் வரை தான் பேச்சு திறமையை வெளிப்படுத்த முடியும். பேச்சு போட்டியில் கலந்துக்கொண்டு உங்களது கருத்துகளை உறுதியாகவும். தெளிவாகவும் வெளிப்படுத்த வேண்டும். பேச்சு போட்டிகளில் கலந்துக்கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது திறமையை வளர்த்து தமிழகத்தை தலைநிமிர செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை ஒன்றியக் குழுத் தலைவர் காமாட்சி மூர்த்தி, செம்பனார்கோயில் ஒன்றியக் குழுத் தலைவர் நந்தினிஸ்ரீதர், மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், மயிலாடுதுறை பங்குதந்தை அருள்திரு. எஸ்.தார்சிஸ்ராஜ், திமுக ஒன்றிய செயலாளர்கள் எம் அப்துல்மாலிக், இமயநாதன், மன்னம்பந்தல் ஊராட்சிமன்றத் தலைவர் பிரியா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இளையபெருமாள். ஒன்றியக்குழு உறுப்பினர் வீரபாண்டியன். நகர்மன்ற உறுப்பினர்கள் மணிவண்ணன், சர்வோதயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கோ.அர.நரேந்திரன். கல்லூரி முதல்வர் முனைவர் இரா.நாகராஜன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன், அரசு வழக்கறிஞர்கள் சிவதாஸ், தணிகைபழனி, தமிழாய்வுத்துறை தலைவர் முனைவாசு.தமிழ்வேலு. பேராசிரியர்கள் மற்றும் திராளன கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.