மயிலாடுதுறை, ஏ.வி.சி. கல்லூரி வேலாயுதம் அரங்கத்தில் தமிழக அரசின் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் அனைத்து கல்லூரி மாணவ – மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நேற்று நடந்தது.
போட்டிக்கு நிவேதாமுருகன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய மாவட்ட
ஒருங்கிணைப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான ராஜகுமார், சிறுபான்மையினர் ஆணைய மாநில ஒருங்கிணைப்பாளர் ஹாஜாகனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேச்சுப் போட்டிக்கு கலெக்டர் லலிதா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நேர்முக தேர்வுகளுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்டவைகள் அவசியமான ஒன்று. இதற்காக நாளிதழ்களையும், புத்தகங்களையும் படிக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரிகள் வரை தான் பேச்சு திறமையை வெளிப்படுத்த முடியும். பேச்சுப் போட்டியில் உங்களது கருத்துகளை உறுதியாகவும், தெளிவாகவும் வெளிப்படுத்த வேண்டும்.
இதில், ஒன்றியக் குழுத் தலைவர்கள் காமாட்சி மூர்த்தி, நந்தினிஸ்ரீதர், மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் நரேந்திரன், கல்லூரி முதல்வர் நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன் மற்றும் பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.