நெய்வேலி சரக டிஎஸ்பி ராஜேந்திரன் ஆலோசனையின் பேரில் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் தண்ணீர் குடில் திறப்பு விழா நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் பொறுப்பேற்றதிலிருந்து சட்டம் ஒழுங்கு சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா ஒவ்வொரு முறையும் புதுப்புது உத்திகளை கையில் எடுத்து கலக்கி வருகிறார். அதுபோல இன்று வாருங்கள் இளைஞர்களே குற்றமற்ற குறிஞ்சிப்பாடியை உருவாக்குவோம் என்று தண்ணீர் குடில் மேல் எழுதிய வாசகம் அனைவரையும் கவரசெய்தது. பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த மண்பானையில் குடிநீர் வைத்தது சிறப்பு.
குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் நெய்வேலி சரக டிஎஸ்பி ராஜேந்திரன் அவர்கள் ஆலோசனையின் பேரில் யாரும் இதுவரையில் வைத்திராத புதுமையான முறையில் செய்த குடிநீர் குடிலை இன்று சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா திறந்து வைத்தார். இந்தக் குடிநீர் குடில் மேல் வாருங்கள் இளைஞர்களே குற்றமற்ற குறிஞ்சிப்பாடியை உருவாக்குவோம் என்ற வாசகத்தை பதித்து இளைஞர்களின் இதயத்தை ஈட்டியால் குத்தியது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தி இளைஞர்கள் மத்தியில் நன் மதிப்பைப் பெற்றுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குடிலை பற்றி சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா அவரிடம் கேட்டபோது இந்த குடிநீர் குடில் தற்காலிகமானது அல்ல எப்பொழுதும் பொதுமக்கள் மற்றும் காவல் நிலையத்திற்கு வருபவர்கள் பயன்படுத்தும் வகையில் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் சுகாதாரமான குடிநீர் வழங்கி நிரந்தரமாக பராமரிக்கப்பட்டு வரப்படும் எனத் தெரிவித்தார்.
மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்