0 0
Read Time:1 Minute, 36 Second

திட்டக்குடி அருகே, ஈ.கீரனூர் கிராமத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் ஆதரவற்ற முதியவர்களுக்கு 60 சதவீத நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.

இதற்கு வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் மதி வரவேற்றார், தனி வருவாய் ஆய்வாளர் முருகன் முன்னிலை வகித்தார், ஊராட்சி மன்ற தலைவர் பச்சையம்மாள் வரதராஜன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜதிலகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.

இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 46 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இதில் 40 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.

மீதமுள்ள மனுக்கள் மீது மேல்நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதில் பொறியாளர் சத்யராஜ், ஊராட்சி செயலாளர் சோழன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %