0 0
Read Time:3 Minute, 10 Second

சீர்காழி ரயில் நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெரும்பான்மையான விரைவு ரயில்கள் நின்று சென்றன இது சீர்காழி பகுதியில் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக இரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.. மீண்டும் இரயில்கள் இயக்கப்பட்டபோது சீர்காழி ரயில் நிலையத்தில் இரண்டு விரைவு ரயில்கள் மட்டுமே நின்று சென்று பயணிகளை ஏற்றி இறக்கி வருகிறது இந்த ரயில் பாதை வழியாக செல்லும் 16 விரைவு ரயில்கள் சீர்காழி ரயில் நிலையத்தில் நின்று செல்லாததால் சீர்காழி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்

ஆர்ப்பாட்டம்;
         இந்த நிலையில் சீர்காழி ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்லக்கோரி ரயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் நேற்று சீர்காழி ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார் துணைத் தலைவர் ஷரவணன்  பொருளாளர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சங்க நிர்வாகி             மார்க்ஸ்பிரியன் வரவேற்று பேசினார். சங்க செயலாளர் முஸ்தபா நன்றியுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டு சீர்காழி ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தி பேசினர்

போராட்டம் அறிவிப்பு;
சீர்காழி ரயில் நிலையத்தில் ஏற்கனவே நின்று சென்ற 19 விரைவு ரயில்கள் மீண்டும் நின்று செல்ல வேண்டும் இல்லையென்றால் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசினர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சியினர் வக்கீல் சங்க நிர்வாகிகள் தன்னார்வதொண்டு நிறுவன நிர்வாகிகள் வர்த்தக சங்க நிர்வாகிகள் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள்‌ தொண்டு நிறுவன நிர்வாகிகள் உள்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %