விருத்தாசலம் – சேலம் இடையே முன்பதிவில்லா பயணிகள் ரயில் சேவை வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்பட்டு வந்தது. கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இந்த ரயில் சேவையை ஞாயிற்றுக்கிழமை தவிர இதர 6 நாள்களுக்கு அளிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. வருகிற 23-ஆம் தேதி முதல் இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கவுள்ளது.
இதன்படி, ரயில் எண்- 06816 சேலம் சந்திப்பில் காலை 10.05 மணிக்கு புறப்பட்டு பகல் 1 மணிக்கு விருத்தாசலத்தை வந்தடைகிறது. மறுமாா்க்கத்தில் விருத்தாசலம் சந்திப்பிலிருந்து பிற்பகல் 2.05 மணிக்கு ரயில் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சேலம் சென்றடைகிறது.
இந்த ரயில் சேலம் மாா்க்கெட், சேலம் டவுன், அயோத்தியாபட்டிணம், மின்னம்பள்ளி, வாழப்பாடி கேட், ஏத்தாப்பூா், பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூா், மேல்நாரியப்பனூா், சின்னசேலம், சிறுவாத்தூா், புக்கிரவாரி, கூத்தக்குடி, முகாசாபரூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.