மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் மீனவர் குடியிருப்பை சேர்ந்த பிரபாகரன் உள்ளிட்ட 7 மீனவ குடும்பத்தினரை கடந்த 1½ ஆண்டுகளாக பஞ்சாயத்தார் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என 7 மீனவ குடும்பத்தினர் ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து சீர்காழி உதவி கலெக்டர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தும் தீர்வு ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 7 மீனவ குடும்பத்தினர் அளித்து மனுவில், ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததை ரத்து செய்ய வேண்டும், 1½ ஆண்டுகளாக எங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் வாழ்வாதாரம் பாதித்து பிள்ளைகள் படிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இந்த கோரிக்கைகயை வலியுறுத்தி 7 மீனவ குடும்பத்தினர கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துபோராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.