0 0
Read Time:2 Minute, 15 Second

சென்னை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், இரு கோஷ்டிகளாக செயல்படுவதாக தெரிகிறது. திருத்தணி பகுதியில் இருந்து ரெயில் மூலம் வரும் மாணவர்கள் ஒரு கோஷ்டியாகவும், பூந்தமல்லி பகுதியில் இருந்து பஸ்சில் வரும் மாணவர்கள் இன்னொரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இவர்கள் பூந்தமல்லி பகுதியில் நேற்று காலை மோதலில் ஈடுபட்டனர்.

இந்த மோதல் கல்லூரி வளாகத்திலும் நடக்கலாம் என்று கருதி, கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயன் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ரமேஷ் தலைமையில் நேற்று முன்னெச்சரிக்கையாக போலீஸ் படை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

கல்லூரிக்குள் சென்ற மாணவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். அப்போது கல்லூரியின் பின்புறம் உள்ள சுவரையொட்டி மர்ம பை ஒன்றை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த பைக்குள் 6 பட்டாக்கத்திகள் மற்றும் 20 காலியான மதுபாட்டில்கள் காணப்பட்டது. அவற்றை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

தாக்குதலில் ஈடுபட மாணவர்களில் ஒரு பிரிவினர் இந்த ஆயுதங்களை கொண்டுவந்து மறைத்து வைத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக 6 மாணவர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆயுதங்கள் கைப்பற்றியது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், மாணவர்களிடையே நடக்க இருந்த மிகப்பெரிய மோதல் தவிர்க்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %