மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய 4 தாலுகாக்களில் ஜமாபந்தி இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்கி அடுத்த மாதம்(ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் மயிலாடுதுறை தாலுகாவில் இன்று முதல் 25-ந் தேதி வரையும் கலெக்டர் தலைமையிலும், சீர்காழி தாலுகாவில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமையில் இன்று முதல் அடுத்த மாதம் 1-ந் தேதி வரையிலும், குத்தாலம் தாலுகாவில் மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி தலைமையில் 25-ந் தேதி வரையிலும், தரங்கம்பாடி தாலுகாவில் சீர்காழி உதவி கலெக்டர் நாராயணன் தலைமையில் 26-ந் தேதி வரையில் ஜமாபந்தி நடக்கிறது.
ஜமாபந்தியில் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்த்து சமூக இடைவெளியை பின்பற்றி தங்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக வழங்கி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.