0 0
Read Time:1 Minute, 56 Second

சென்னை; பூந்தமல்லி அருகே தொன்மை வாய்ந்த பச்சை கல் லிங்கம் மற்றும் உலோக
நாகாபரணத்தை கடத்த இருப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல்
கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீசார் சிலையை
வாங்குவது போன்று நாடகம் ஆடி கடத்தல்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்பொழுது இந்த சிலையின் மதிப்பு ரூ.25 கோடி என்பது தெரியாமல் சிலை
கடத்தல் காரர்கள் போலீசாரிடம் பேரம் பேசியுள்ளனர். பின்னர் அந்த சிலைகள் அனைத்தும் கடத்தல் சிலைகள் என்பதை உறுதி செய்த போலீசார் உடனடியாக கடத்தல்காரர்களை கைது செய்து சிலைகளை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வெள்ளவேடு புது காலனியை சேர்ந்த பக்தவச்சலம் என்கிற பாலா மற்றும் புதுச்சத்திரம் கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்த பாக்யராஜ் ஆகியோர் என
தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பச்சைக்கல் லிங்கம் மற்றும்
உலோகத்தாலான நாகாபரணம் ஆகியவற்றை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்து இவர்கள் இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சிலை மற்றும் நாகாபரணம் ஆகியவை 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும் தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %