பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. உரிமை மீட்பு கூட்டமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்த மாதம் முதல் அவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். கடலூர் நெய்வேலி, கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யில் பணிபுரியும் இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளர்கள் அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி நிரந்தரம் செய்யும் வரை அனைத்து ஒப்பந்த மற்றும் சொசைட்டி தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும்,
சீனியாரிட்டி பட்டியலில் விடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்களை சொசைட்டியில் இணைக்க வேண்டும். மனித சங்கிலி என்.எல்.சி. நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்த தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. உரிமை மீட்பு கூட்டமைப்பின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச் கேட் எதிரே சென்னை-கும்பகோணம் சாலையில் நடந்த போராட்டத்துக்கு தமிழக உழைக்கும் மக்கள் முன்னணி மாநில பொது செயலாளர் சேகர் தலைமை தாங்கினார்.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு நல சங்க தலைவர் பரமசிவம், என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் அந்தோணி செல்வராஜ், பொதுச்செயலாளர் செல்வமணி, திராவிட இன்கோசர்வ் ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், மூவேந்தர் இன்கோசர்வ் ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் முருகையா, நாம்தமிழர் தொழிற்சங்க பாசறை நிர்வாகிகள் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில செயலாளர் ரவீந்திரன், மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில துணை தலைவர் விப்ர நாராயணன், திராவிட இன்கோசர்வ் ஒப்பந்த தொழிலாளர் சங்க சிறப்பு தலைவர் கோபாலன், நாம்தமிழர் தொழிற்சங்க பாசறை நிர்வாகி தனசேகர் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் விளக்கி பேசினர். முடிவில் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.
வேலைநிறுத்தம் போராட்டத்தின் முடிவில், சேகர் நிருபர்களிடம் கூறுகையில், வருகிற 26-ந்தேதி சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மத்திய தொழிலாளர் நல ஆணைய அலுவலகத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் சென்று கோரிக்கை மனு அளிப்பது, 27-ந் தேதி நிர்வாகிகள் குழு கூட்டத்தை நடத்தி அடுத்த மாதம்( ஜூன்) முதல் இன்கோசர்வ் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர இருப்பதாக அவர் தெரிவித்தார்.