மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட பயணிகள் சேவைக்குழுவினர் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வலியுறுத்தப்படும் என்று தெரிவித்தனர். மயிலாடுதுறை மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட பயணிகள் சேவைக்குழுவினர் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வலியுறுத்தப்படும் என்று தெரிவித்தனர்.
ரெயில் நிலையத்தில் ஆய்வு மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில், ெரயில்வே அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட பயணிகள் சேவைக் குழுவினர் ஜெயந்திலால், பபிதா பிரேமோர், பிரமோத்குமார் சின்கா, மோகன்லால் ஜிகாரா ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் ரெயில் நிலையத்தில் உள்ள பயணிகள் ஓய்வறை, டிக்கெட் வழங்கும் இடம், ரெயில் நிலையத்தை கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.பின்னர், சேவைக்குழுவினரிடம் மத்திய அரசு வக்கீல் ராஜேந்திரன் ஒரு மனு அளித்தார். அதில், மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கு ஜனசதாப்தி ரயில் இயக்க வேண்டும். செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டித்து திருவாரூர் வழியாக இயக்க வேண்டும்.
வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் நலனை கருத்தில்கொண்டு எக்ஸலேட்டர்(நகரும் படிக்கட்டுகள்) வசதி செய்துகொடுப்பதோடு, பேட்டரி கார் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.கொரோனா கால கட்டத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து பயணிகள் ரயிலையும் மீண்டும் இயக்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது.இதேபோல, ரயில் பயணிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் மகாலிங்கம் தலைமையில் கொடுக்கப்பட்ட மனுவில்,
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 1-வது பிளாட்பாரத்தில் சரக்கு ரயில்கள் வந்து செல்வதால் மைசூர், கோவை, சென்னை, திருப்பதி, ராமேஸ்வரம் போன்ற ஊர்களுக்கு செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் 2, 3, 4, 5-வது பிளாட்பாரங்களில் நிறுத்தப்படுகிறது.இதனால் வயதானவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் 1-வது பிளாட்பாரத்தில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்கால், விழுப்புரம், திருநெல்வேலி உள்பட நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. பயணிகள் ரெயில் அதனைத்தொடர்ந்து பயணிகள் சேவைக்குழுவை சேர்ந்த ஜெயந்திலால் நிருபர்களிடம் கூறுகையில், மயிலாடுதுறை ெரயில் நிலையத்தில் பயணிகளுக்கு மின்விசிறிகள் குறைவாக உள்ளது. அதனை அதிகரிப்பதற்கும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கும் பரிந்துரைக்கப்படும். நகரும் படிக்கட்டுகள் அமைப்பதற்கும், நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில்களையும் மீண்டும் இயக்குவதற்கு ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்துவோம் என்றார்.அப்போது மயிலாடுதுறை ரெயில் நிலைய மேலாளர் சங்கர்குரு, பா.ஜ.தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவிசேதுராமன், நாஞ்சில்பாலு மற்றும் ரயில் பயணிகள் சங்க பொறுப்பாளர்கள் பலர் உடன் இருந்தனர்.