மயிலாடுதுறையில் ரு 15 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டும் இடத்தினை காவல்துறை வீட்டுவசதி துறை டிஜிபி நேரில் ஆய்வு மேற்கொண்டார் :-
புதியதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டுவதற்கு தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசாணை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து மன்னம்பந்தல் பகுதியில் அமைய உள்ள புதிய காவல் கண்காணிப்பாளர் கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை தமிழ்நாடு காவல்துறையின் வீட்டுவசதி வாரிய துறை சேர்ந்த டி.ஜி.பி விஸ்வநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக பூம்புகார், பெரம்பூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில், காவல் மற்றும், தீயனைப்பு துறை சம்பந்தமான கட்டிட கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்ட அவர் காவல்துறையினர் தங்கும் வீடுகளையும் பார்வையிட்டார்.
தமிழக அரசால் ரூ 15 கோடியில் மன்னம்பந்தல் அடுத்த பால்பண்ணை பகுதியில், ஒதுக்கப்பட்ட சுமார் 4.5 ஏக்கர் நிலங்களை பார்வையிட்டு மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் நிஷா உடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து அதிகாரிகள் வரைபடம் மூலம் கட்டுமான பணிகள் குறித்து விளக்கமளித்தனர். மேலும் அருகிலேயே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு இரண்டு அலுவலகங்களும் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.