0 0
Read Time:2 Minute, 47 Second

பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கி வருவது சிதம்பரம் நடராஜர் கோயில். உலகப்புழ்பெற்ற இந்த கோயிலுக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் பெருமளவில் பக்தர்கள் வருவது வழக்கம். மூலவரே உற்சவராகவும் எழுந்தருள்வது இந்த கோயிலின் சிறப்பு.

மூலவரான சபாநாயகர் வீற்றிருக்கும் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு அவர்கள் ஸ்வாமியையும், சிதம்பர ரகசியத்தையும் தரிசித்து வந்தனர்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக, கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பதற்கு அரசால் வழங்கப்பட்ட அரசு வழிகாட்டி நெறிமுறைகளின்படி பக்தர்களிடமிருந்து பூஜை பொருட்களை பெறுதல், அமர்ந்து தரிசனம் செய்தல் மற்றும் அங்கபிரதட்சனம் செய்தல் ஆகியவை தவிர்க்கப்பட்டு வந்தன.

தற்போது கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளதால் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் விலக்கப்பட்டு அனைத்து கோயில்களிலும் ஏற்கனவே இருந்த வழிபாட்டு நடைமுறைகள் மீண்டும் தொடரும் நிலையில், சிதம்பரத்தில் நடராஜர் கோயிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள், கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியதாக பக்தர்கள் தரப்பில் பெரும் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கடலூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதையடுத்து, கோயிலில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த பழக்க வழக்கத்தின்படியும், பக்தர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டும் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, பக்தர்கள் இன்று கனகசபை மீது ஏறி நடராஜரை வழிபட்டனர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க கோயிலுக்குள் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %