செம்பனார்கோயில், மே.20:
மயிலாடுதுறை மாவட்டம் இளந்தோப்பு கிராமம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மனைவி மகேஸ்வரி (42). இத்தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மகேஸ்வரி கடந்த 16-ஆம் தேதி சங்கரன்பந்தல் நந்தவன தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் இளந்தோப்பு கிராமம் நோக்கி கணவன் மனைவி இருவரும் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். செம்பனார்கோயில் அருகே கீழ்மாத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஓடியதால் மகேஸ்வரியின் கணவர் திடீரென தனது வாகனத்தை நிறுத்தம் செய்துள்ளார். அப்பொழுது நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த செந்தில்குமார் சிறிய காயங்களுடன் தப்பிக்க மகேஸ்வரிக்கு படுகாயம் ஏற்பட்டது.
கணவர் செந்தில்குமார் உறவினருக்கு தகவல் கொடுத்து அங்கு வந்த குடும்பத்தினர் அவர்களை முதல் உதவிக்காக மயிலாடுதுறை அழைத்து சென்றனர் கணவர் சிறிய சிராய்ப்புகளுடன் உடல் தேறிய நிலையில் மனைவி மகேஸ்வரி கழுத்து முறிவு ஏற்பட்டு மோசமான நிலையில் இருந்ததால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு 17-ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த மகேஸ்வரி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செம்பனார்கோயில் காவல் ஆய்வாளர் செல்வி மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.