0 0
Read Time:1 Minute, 35 Second

மயிலாடுதுறை, கொள்ளிடம் அருகே திருமயிலாடி கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு, காய்கறி சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா தலைமை தாங்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் அரவிந்தன் வரவேற்றார்.மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர் கலந்து கொண்டு தொழில்நுட்பம் மற்றும் திட்ட விளக்கம் குறித்து பேசினார். கொள்ளிடம் தோட்டக்கலை அலுவலர் சுகன்யா, காய்கறி சாகுபடி முக்கியத்துவம் குறித்து பேசினார்.

அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் தோட்டக்கலை துறை இணைப் பேராசிரியர் பத்மநாபன், உதவி வேளாண்மை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி அளித்தனர்.

பயிற்சியில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் நன்றி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %