0 0
Read Time:1 Minute, 22 Second

கடலூர் சேத்தியாத்தோப்பு, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் பகுதியை சேர்ந்த மாயகிருஷ்ணன், பாலமுருகன், ராமர் மகன் பாதமுத்து(வயது 16) ஆகியோர் ஒரு காரில் வடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

காரை அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் ஓட்டினார். சென்னை – கும்பகோணம் சாலை சேத்தியாத்தோப்பு அடுத்த சோழத்தரம் அருகே உள்ள நந்தீஸ்வரமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த தடுப்பு கட்டையில் மோதியது.

இதில் பாதமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த பாலமுருகன், மாயகிருஷ்ணன், கணேசன் ஆகியோர் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திாியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாாின்பேரில் சோழத்தரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %