சென்னை, திருவல்லிக்கேணி, முனுசாமி நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 54). இவர், சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் 15-வது மண்டல அலுவலகத்தில் 7 ஆண்டுகளாக அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர் சரிவர வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இதுசம்பந்தமாக கடந்த 5-ந் தே தி சத்தியமூர்த்திக்கு அலுவலகத்தில் இருந்து ‘மெமோ ‘கொடுத்து விளக்கம் கேட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சத்தியமூர்த்தி சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்தில் உதவியாளர் தற்கொலை வேலைக்கு வந்தார்.
நண்பகல் நேரத்தில் மண்டல அலுவலக மொட்டை மாடியில் அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த செம்மஞ்சேரி போலீசார், சத்தியமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார், பணிச்சுமை காரணமாக சத்தியமூர்த்தி தற்கொலை செய்த கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.