மயிலாடுதுறை திருக்கடையூர், செம்பனார்கோவில் அருகே சாலையின் குறுக்கே நாய் ஓடியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலியானார். பெற்றோர் வீட்டுக்கு சென்றார் செம்பனார்கோவில் அருகே இளந்தோப்பு கிராமம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்.
இவருடைய மனைவி மகேஸ்வரி (வயது42). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று கணவர் செந்தில்குமாருடன் மகேஸ்வரி மோட்டார் சைக்கிளில் சங்கரன்பந்தலில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் இளந்தோப்பு கிராமத்துக்கு வந்து கொண்டிருந்தார்.
கீழே விழுந்து படுகாயம் செம்பனார்கோவிலை அடுத்த கீழ்மாத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஓடி வந்ததால் செந்தில்குமார் பிரேக் படித்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த மகேஸ்வரி கிழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.