தரங்கம்பாடி, மே- 24;
தமிழ்நாடு அரசு வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரம் திருக்கடையூர், காளியப்பநல்லூர், மாமாகுடி, காலமநல்லூர், கூடலூர் உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலக அலுவலகத்தில்
காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
திருக்கடையூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு செம்பனார்கோவில் வேளாண்மை உதவி இயக்குனர் தாமஸ் தலைமை தாங்கினார், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதிசிவராஜ், ஒன்றியக்குழு தலைவர் நந்தினிஸ்ரீதர், தி.மு.க. ஒன்றிய செயலாளர் எம்.அப்துல்மாலிக், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் துளசிரேகா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு துணைத்தலைவர் மைனர் பாஸ்கர் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு உளுந்து, பயிறு வகைகள் மற்றும் மருந்து தெளிப்பான் கருவி, தென்னங்கன்று மற்றும் பல்வேறு வகையான காய்கறி விதைகள் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வழங்கினர். முடிவில் ஊராட்சி செயலர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.