கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள க.ஆலம்பாடி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட துவக்க விழா நடைபெற்றது இத்திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார் தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் இத்திட்ட துவக்க விழா நடைபெற்றது அதனையொட்டி புவனகிரி அருகே உள்ள க. ஆலம்பாடி கிராமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார்.
தோட்டக்கலை உதவி இயக்குனர் சிவக்குமார் விதை அலுவலர் கலியபெருமாள் வட்டார தொழில்நுட்ப மேலாளர் கல்பனா உதவி வேளாண் அலுவலர் நாகரத்தினம் உதவி தோட்ட அலுவலர் கல்பனா ஆகியோர் முன்னிலை வகித்து விவசாயிகள் மத்தியில் தமிழக அரசின் வேளாண் வளர்ச்சித் திட்டத்தை பற்றி எடுத்துரைத்தனர் மேலும் தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய பல்வேறு சிறப்பு சலுகைகளை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அட்மா குழு தலைவரும் புவனகிரி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளருமான டாக்டர் மனோகர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கும் தென்னங்கன்று பயிர் உரங்கள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் விவசாயம் பொருட்களை வழங்கினார் மேலும் இந்த நிகழ்ச்சியில் அட்மா உறுப்பினர் ரவி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி செயலர் நன்றி கூறினார்.
மாவட்ட செய்தியாளர்:பாலாஜி