தரங்கம்பாடி, மே.27:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் கவுன்சிலர் சாதாரண கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சுகுணா சங்கரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பொன் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் கமலக்கண்ணன் வரவேற்று பேசினார்.
இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்துகண்டு பேரூராட்சியில் உள்ள மொத்தம் 18 வார்டுகளில் குடிநீர், மின்வசதி மற்றும் சாலை வசதிகள் குறித்து கவுன்சிலர்கள் குறைகளை தெரிவித்தால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார். முன்னதாக பேரூராட்சி தூய்மை பணியாளருக்கு குப்பை அள்ளும் வண்டி 10 நபர்களுக்கு வழகினார். இதில் சுகாதார ஆய்வாளர் இளங்கோ, அலுவலக ஊழியர்கள் மற்றும் கவுன்சிலர்கள் மாவட்ட திமுக பிரதிநிதி சடகோபன் மற்றும் பேரூர் திமுக பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
படவிளக்கம்: தரங்கம்பாடி பேரூராட்சியில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு குப்பை அள்ளும் தள்ளுவண்டிகளை எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கியபோது.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.