சீர்காழியில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சருக்கு 5 ஆயிரம் அஞ்சல் அட்டைகள் அனுப் பிவைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
சீர்காழியில் கரோனா பரவல்தொடங் கிய 2020-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சீர்காழி ரயில் நிலையத்தில் இரு மார்க் கங்களிலும் பல்வேறு விரைவு ரயில்கள் நின்று சென்றன. ஊரடங்குக்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 13-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் சீர்காழியில் நின்று செல்வ தில்லை. இதனால் வணிகர்கள், மாண வர்கள், விவசாயிகள்,பொதுமக்கள் உள் ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே விழுதுகள் இயக்கத்தின் சார்பில் மத்திய இரயில்வே துறை அமைச்சருக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை என தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் விழுதுகள் இயக்கம், இரயில் உபயோகிபாளர்கள் சங்கம்,
வர்த்தக சங்கத்தினர், தன் னார்வஅமைப்பினர், பொதுமக்கள், விவசாயிகள் மாணவர்கள் இணைந்து சீர்காழி ரயில் நிலையம் முன் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
எனினும் எந்த பயனும் இல்லை. இதனால் அடுத்த கட்டமாக மத் திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ்க்கு கோரிக்கையை வலியு றுத்தி 5 ஆயிரம் அஞ்சல் அட்டைகள் அனுப்புவது என முடிவெடுக்கப்பட் டது. அதற்காக பொதுமக்கள் உள் ளிட்ட அனைத்து தரப்பினரிடமிகுந் தும் கோரிக்கை எழுதப்பட்ட தபால் அட்டைகள் பெற்று மத்திய அமைச் சருக்கு அனுப்ப ரயில் விழுதுகள் இயக்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். அனைத்து தபால் அட்டைகளை யும் சேகரித்து வரும் வாரத்தில் மத்திய அமைச்சருக்கு அனுப்ப உள்ளதாக விழுதுகள் இயக்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
அஞ்சல் அட்டை மூலம் கோரிக்கை விடுக்க விரும்புபவர்கள் விழுதுகள் இயக்கத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அதன் தலைவர் ஏ.கே.ஷரவணன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்