காரைக்கால், மே- 29;
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 27-ஆம் தேதி காரைக்கால்மேட்டில் அமைந்துள்ள சுனாமி குடியிருப்பில் குடிநீரில், கழிவு நீர் கலந்து அதன் காரணமாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் அரசுமுறைப் பயணமாக வெளியூர் சென்றிருந்த பாண்டிச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா அரசு பொது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்பொழுது சிகிச்சை பெற்று வருபவர்களிடம் அமைச்சர் கூறுகையில் இது போன்ற நிகழ்வு எதிர்காலத்தில் ஏற்படாத வண்ணம் அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். நீங்கள் இனிமேல் குடிநீரை கொதிக்க வைத்து குடிக்கவேண்டும். மேலும் தங்கள் பகுதிகளில் ஏதேனும் சிறிய குறைகள் இருந்தால் உடனடியாக ஆட்சியரிடமோ அல்லது மாவட்ட துணை ஆட்சியரிடமோ அல்லது என்னிடமோ உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
இதில், காரைக்கால் துணை மாவட்ட ஆட்சியர் எம்.ஆதர்ஷ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுப்ரமணியம் மற்றும் அரசு அதிகாரிகள், காரைக்கால் மாவட்ட முக்கிய பிரமுகர்கள், அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் உடன் இருந்தார்கள்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.