0 0
Read Time:3 Minute, 9 Second

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29 ஆம் தேதியுடன் முடிவடைகின்றது. காலியாகும் இடங்களுக்கான வேட்பு மனுக்களை ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ தலைமைச் செயலகத்திலுள்ள அலுவலகத்தில் மே 31 ஆம் தேதி வரை தாக்கல் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. காலை 11 மணி – பிற்பகல் 3 மணி வரை, வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் எனவும், வேட்பு மனு பரிசீலனை ஜூன் 1, வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக்​ கொள்வதற்கான கடைசி நாளாக ஜூன் 3 அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை திமுக வேட்பாளர்களான கல்யாணசுந்தரம், கிரிராஜன், ராஜேஷ்குமார் ஆகியோர் மே 27 ஆம் தேதி தங்கள் வேட்பு மனுக்களை முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தாக்கல் செய்தனர்.

அதிமுக வேட்பாளர்கள் சி வி சண்முகம், தர்மர் ஆகியோரரும், காங்கிரஸ் சார்பாக போட்டியிடவுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் இன்று மனு தாக்கல் செய்தனர். முன்னதாக தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் அரசியல் சூழல் குறித்து 2 மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டனர்.
மாநிலங்களவை தேர்தலில் 3 சுயேட்சைகள் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்த நிலையில், மேலும் 2 சுயேட்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், போலி பத்திரப்பதிவு மேற்கொள்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மனு தாக்கல் செய்ததாக வேல்முருகன் சோழகனார், தேவராஜன் ஆகிய இருவரும் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %