மயிலாடுதுறையில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு நற் சான்றிதழ்களை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் வழங்கி பாராட்டினார்!
தமிழக முதல்வரின் கனவு திட்டமான இல்லம் தேடிக் கல்வி திட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்தில் நடைப்பெற்று வருகிறது.
அதுசமயம் தன்னலமற்று சிறப்பாக இதில் சேவை செய்து வரும் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா மயிலாடுதுறையில் திருஇந்தளூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் நகராட்சி அரசுபெண்கள் மேல்நிலைப்பள் ளியிலும் சிறப்பாக நடைப்பெற்றது. விழாவில் பங்கேற்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் வட்டாரக்கல்வி அலுவலர் தமிழ்செல்வி. வளமைய மேற்பார்வையாளர் முருகையன் ஆகியோர் கலந்துக்கொண்டு திட்டத்தை அளித்த தமிழகமுதல்வருக்கு நன்றி கூறியும்.
இந்ததிட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் தன்னார்வலர்களை பாராட்டி சான்றிதழ்களையும் அளித்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியில் நாடக நடிகர்கள் நலச்சங்க மாநில பொதுசெயலாளர் ஆர்.ஆர்.பாபு. சமுக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம், நகர்மன்ற உறுப்பினர் காந்தி, ரயில்வே அஞ்சல் ஊழியர் சங்க தலைவர் நாராயணன், உடற்கல்வி ஆசிரியர் பாரதிதாசன் ,பொறியாளர் துரை அஷ்வின்ராஜ் உள்பட ஏராளமானோர் பங்கேற்றார்கள்.
இந்த நிகழ்வை மயிலாடுதுறை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மனோகர், வீரபாண்டியன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இதில் 200க்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்குப்பெற்றனர். இவ் விழாவில் பங்கேற்று மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் தன்னார்வலர்கள் க்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றி பேசியதாவது ,
“தமிழக அரசின் கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டம் என்னும் சிறப்பு மாலை நேரக் கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வ பெண்கள், பட்டப்படிப்பு முடித்த கல்லூரி மாணவிகள் தத்தம் பகுதியில் உள்ள இளம் மாணவ மாணவிகளை அழைத்து தினசரி கல்வி போதித்து வருகின்ற செயல் மிகவும் பாராட்டுக்கு உரியதாகும். பேரிடர் காலத்தில் குழந்தைகள் பள்ளி மாணவ மாணவிகள் தத்தம் கல்வியை கற்க முடியாமல் அவதியுற்று வந்த நிலையை போக்கும் நோக்கோடு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் எண்ணத்தில் தோன்றிய திட்டமாக, தமிழக அரசின் கல்வித்துறை சார்பில் முனைப்புடன் இக்கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாதம் ரூபாய் 1000 மட்டுமே ஊக்க ஊதியம் பெற்றுக் கொண்டு தமிழகத்தின் கல்வி மேம்பாட்டிற்காக தாயுள்ளத்தோடு தொண்டாற்றி வருகின்ற தன்னார்வ பயிற்றுனர்களை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும். பயிற்றுனர்களால் தமிழக மாணவர்களின் பண்பு வளர்வதுடன்,
எதிர்காலத்தில் சிறந்த மாணவர்களாக உருவாகி கல்வித்துறையில் உயர்ந்த நிலைக்கு வரக் கூடிய அளவில் அவர்களும் உருவாக்கப் படுவார்கள் என்பது உறுதி. அதற்கு அடிப்படை காரணமான தன்னார்வலர் களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டுவது மிகப் பெருமையாக உள்ளது” என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் பாராட்டி பேசினார்.
செய்தியாளர்: அப்பர், மயிலை