மயிலாடுதுறையில் தனியார் திருமண மண்டபம் திறப்பு விழா மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வி.எஸ்.பி.திருமண மண்டபத்தில் உரிமையாளர் கழக வழக்கறிஞர் பிரபாகரன் அனைவரையும் வரவேற்புரை ஆற்றினார்.
இதில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு தனியார் திருமண மண்டபத்தை திறந்து வைத்தார். பின்னர் கேரளாவில்19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணியில் பங்கேற்ற மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த நான்கு மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர். அவர்கள் அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் அவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் பேசுகையில்:-
இன்று இந்தியாவின் ஜனநாயகத்தில் இந்தியாவின் இறையாண்மைக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் தீங்கு மற்றும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஒற்றை தலைமையாக இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக திராவிடன் மாடல் ஆட்சியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விளங்குகிறார். 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் நேர்மையாக உழைத்து வருகிறார். எளிமையாக அனைவரிடம் கருத்துக்களை கேட்டு ஒரு கொள்கையின் தடம் மாறாத தலைவரை நாம் பெற்றிருக்கிறோம். 8 வருடமாக உள்ள மத்திய அரசு தமிழ்நாட்டினுடைய முதலமைச்சரின் நடவடிக்கை இந்தியா முழுவதும் பிரதிபலிக்கிறது. பாஜக தலைவர்கள் கூட நம் முதல்வரைப் பற்றி பெருமையாக பேசும் நிலைக்கு நாம் உயர்ந்து இருக்கின்றோம். தமிழன் என்று தலை நிமிர்ந்து நிற்கிறோம் என்றால் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் தான் அவருடைய நேர்மையான ஆட்சி காரணமாக தான் என்று கூறினார். அறிஞர் அண்ணா, தந்தை பெரியார், கலைஞர் வழியில் திசை மாறாத தலைவராக தற்போது தமிழக முதல் நிற்கிறார் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, குத்தாலம் ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சத்தியசீலன், எம்.எம்.சித்திக், ஜெகவீரபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் மங்கை சங்கர், ஞான இமய நாதன், இளையபெருமாள், எம்.அப்துல்மாலிக், பி.எம்.அன்பழகன் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் திமுக பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.