0 0
Read Time:2 Minute, 0 Second

உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகரில் ரஷ்ய ராணுவம் நுழைந்துள்ளது.

உக்ரைன் மீது 6வது நாளாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ரஷ்ய ராணுவம், உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகரில் சோதனைச்சாவடிகளை அமைத்து வருகிறது.
இதனை அந்த மாகாண மேயர் இகோர் கோலிகாயேவ் தனது
பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில்
உள்ள கிரிமியாவிற்கு அருகே கெர்சன் நகரம் அமைந்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தையை நடத்த தாங்கள் தயாராக
உள்ளதாக கஜகஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு தேவையான அனைத்து உதவிகளையும்
வழங்க தயாராக இருப்பதாக கஜகஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உக்ரைன் – ரஷ்ய போர் தொடர்பாக பல்வேறு
அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள் பரப்பப்படுவதாக
ட்விட்டர்
நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ட்விட்டர்
நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரஷ்யாவில்
இருந்து பகிரும் தகவல்களில் தவறான தகவல்கள்
இடம்பெறுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே,
ரஷ்யாவில் இருந்து பகிரும் தகவல்களில் Flag குறியீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %