0 0
Read Time:2 Minute, 45 Second

மயிலாடுதுறை, ஜூன், 08;
மயிலாடுதுறை, அருள்மிகு மாயூரநாதசுவாமி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான மன்னன்பந்தல் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்துவரும்
ஸ்ரீ பிடாரி அம்மன், ஸ்ரீ பொன்னி அம்மன் ஆலய மஹோற்சவ தேரோட்டம் திருவாடுதுறை 24 ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியுடன் 8ஆம் தேதி புதன்கிழமை நடைபெற்றது.

வைகாசி மாதம் 10-ம் தேதி செவ்வாய்கிழமை மாலை 6.00 மணிக்கு ரக்ஷாபந்தனம் செய்து மயிலாடுதுறையின் கீழ்பாலும். பொன்னி நதியாம் காவிரியின் தென்பாலும் அமையப்பெற்ற மன்னன்பந்தல் கிராமத்தில் திவ்விய அருள்கொண்டு எழுந்தருளியிருக்கும் சப்தமாதாக்களான பிராமி, மகேஸ்வரி, கெளமாரி, இந்திராணி,
வைஷ்ணவி, வாராகி, சாமண்டிஸ்வரி ஸ்ரீ பொன்னி அம்மன் மற்றும் பரிவாரங்களுக்கும் மஹோற்சவம் செய்யது தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் 12 ஆவது நாளான 8 ஆம்தேதி புதன்கிழமை அருள்மிகு மாயூரநாதர் திருக்கோவில் மண்டகப்படி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ பிடாரி அம்மன் பொன்னி அம்மன் ஆலய சன்னதியில் துவங்கி கீழத்தெரு, மேலத்தெரு, வடக்கு தெரு குளத்தங்கரை தெரு செங்கமேட்டுத்தெரு உள்ளிட்ட விதிகள் வழியாக பக்தர்கள் தேரை இழுத்து சென்று குளத்தங்கரை தெருவில் அமைந்துள்ள காளியம்மன் கோயில் சென்றடைந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து 9 ஆம் தேதி வியாழக்கிழமை மஞ்சள் நீர் விளையாட்டு மற்றும் காப்பு இறக்குதல் நடைபெறும். 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடையாற்றி விழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மன்னம்பந்தல் கோயில் விழாக் குழுவினர், கிராமவாசிகள், இளைஞர் அணியினர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
33 %
Excited
Excited
67 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %