மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் ஏ.வி.சி கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா.இ.ஆ.ப., , ஏ.வி.சி கல்லூரி நிர்வாகி நீதியரசர்(ஓய்வு) கே.வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டு கல்லூரியில் பல்வேறு பாடங்களில் முதல் மதிப்பெண் பெற்று சிறந்து விளங்கிய 14 மாணவ,மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் பல்வேறு போட்டிகளில் வெற்றி யெற்ற 244 மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் கல்வி உதவி தொகையினை வழங்கினார்கள். கல்லூரி ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது..
வரலாற்று சிறப்பு மிக்க இந்த கல்லூரியில் 65-ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.மாணவர்களாகிய நீங்கள் கல்லூரி படிப்பை படிக்கும் போது கூடுதல் தகுதிகளை கற்று கொள்ள வேண்டும்.நம்முடைய லட்சியங்களை எண்ணங்களை இந்த காலகட்டத்தில் தான் உறுதி செய்து கொள்ள வேண்டும்.மாணவர்களாகிய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.கல்லூரி படிப்பை படிக்கும் போது நம்முடைய இலக்கை தீர்மானித்து கொள்ள வேண்டும்.இலக்கை நிர்ணயம் செய்து கொள்வதில் தெளிவாக இருக்க வேண்டும்.பாணவர்கள் திறன்களை வளர்த்து கொள்ளும் போது வேலை வாய்ப்பு பெற உதவியாக இருக்கும். கள உழைப்பு மட்டுமல்ல, அறிவார்ந்த கடின உழைப்பும் தேவை. இன்றைய மாணவ மாணவிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். கல்லூரி எப்படி பசுமையாக உருவாக்கப்பட்டுள்ளதோ அதே போல மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பசுமையாக உருவாக்கப்படும் இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பேசினார்.
ஏ.வி.சி கல்லூரி நிர்வாகி நீதியரசர்(ஓய்வு)பேசியதாவது.
இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் தங்களின் எதிர்காலத்தை சிறந்த முறையில் தீர்மானிக்க வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் கெட்டுக் கொண்டது போல கல்லூரி மட்டுமல்ல மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பசுமையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நான் எங்கு சென்றாலும் செல்லும் இடங்களில் மரக்கன்று வாங்கி வருவேன். இறுதியாண்டு கல்வி பயிலும் மாணவ மாணவிகள் இதோடு கல்வி முடிவு பெறுவதல்ல. மாணவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தனக்கான இலக்கை முன்கூட்டியே நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். அதனை நோக்கி பயணம் செய்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் இந்த கல்லூரியை ஏற்படுத்திய முன்னோர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு நீதியரசர் பேசினார்.
இவ்வாண்டு விழாவில் கலை அறிவியல் கல்லூரி முதல்வர். நாகராஜன்,என்மயில் வாகனம் மற்றும் பேராசிரியர்கள் .முத்தமிழரசள், சத்தியபாமா,சாந்தி மற்றும் உதவி பேராசிரியர்கள்,கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்:ஜமால், மயிலை