0 0
Read Time:1 Minute, 49 Second

சிதம்பரத்தில் நகராட்சி காய்கறி மார்க்கெட் மேல வீதியில் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டை சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு உழவர் சந்தை வளாகத்தில் ரூபாய் 5 கோடியே 77 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி உழவர் சந்தை வளாகத்தில் புதிய காய்கறி மார்க்கெட் கட்டுவதற்கு பூமி பூஜை சிதம்பரம் நகர திமுக செயலாளரும் நகர்மன்ற தலைவருமான செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர்மன்றத் தலைவர் செந்தில்குமார் கலந்துகொண்டு புதிய காய்கறி மார்க்கெட்
கட்டுவதற்கான கட்டிடப் பணியை செங்கற்கள் எடுத்து கொடுத்து பணியை துவக்கினார். இந்த விழாவில் நகர்மன்ற துணைத் தலைவர் முத்து, நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன், பொறியாளர் மகாராஜன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் விஜயராகவன் அப்பு சந்திரசேகர், ராஜன், பாலசுப்ரமணியம், ரமேஷ், ஏஆர்சி மணி , லதா, கல்பனா மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணாமூர்த்தி மாரியப்பன் உள்பட நகர்மன்ற கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். அதுபோல் நகராட்சி சார்பில் திருமண மண்டபம் சுற்றுலா பயணிகள் தங்குமிடம் ஆகியவை கட்டப் பட நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

மாவட்ட செய்தியாளர்:பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %