0 0
Read Time:3 Minute, 23 Second

தருமபுரி மாவட்டத்தில் தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரண நிதியாக வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஹள்ளி கிராமத்தில் ஶ்ரீ காளியம்மன் தேர் திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கோவில் திருவிழாவை 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர்.

திருவிழாவின் முக்கிய நாளான இன்று தேர் ஊர்வலம் நடைபெற்றது. அப்பொழுது வயல்வெளிகளில் தேர் வந்து கொண்டிருக்கும் போது திடீரென தேர் சக்கரத்தின் அச்சாணி முறிந்து தேர் மழமழவென சாய்ந்தது. தொடர்ந்து ஏராளமான மக்கள் கூடி இருந்ததால் தேர் விழுந்ததில் சிலர் தேரின் அடியில் சிக்கிக் கொண்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சரவணன், மனோகரன், மகேந்திரன் ஆகிய 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் மனோகரன் (வயது57), சரவணன் (வயது 50) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி தேர் விபத்தில் படுகாயமடைந்த மனோகரன் (வயது 57) மற்றும் சரவணன் (வயது 50) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். ​உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்த நான்கு நபர்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %