உலக இரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் 500 நபர்களிடம் இருந்து ரத்தம் பெரும் விழா காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மயிலாடுதுறை மகத்தான தெருவில் உள்ள ஜெயின் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரிகள் சிவகுமார் J.D , மற்றும் C.M.O ராஜசேகர் , எம்எல்ஏ ராஜ்குமார் , நகர்மன்றத் தலைவர் குண்டா மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் சென்ட்ரல் லைன்ஸ் சங்கத்தலைவர் சிவலிங்கம் அப்பாஸ் டிராவல்ஸ் அக்பர், எழுத்தாளர் அய்யாசாமி போன்றோரும் ரத்ததானம் செய்தனர்.
மேலும் ஆண்களும் பெண்களுமாய் பல தன்னார்வலர்கள் வந்திருந்து ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் செய்த ஒவ்வொருவருக்கும் சான்றிதழ்களை வழங்கி கௌரவிக்கப்பட்டது . மேலும் பொன்னாடை போர்த்தி சிறப்பு சான்றிதழ்கள் வழங்கி, டைரி, பேக் போன்ற பரிசு பொருட்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ரத்த வகையினை இலவசமாக தெரிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் நிறைய பொது மக்களும் பயன் அடைந்தனர். இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டை மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கம், அறம் செய் அறக்கட்டளை, “ஏபிஜே கலாம் அறக்கட்டளை”, மற்றும் டிரீம்ஸ் இந்தியா பவுண்டேஷன் அமைப்பினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்