சிதம்பரம் அண்ணா காய் கனி மார்க்கெட் நலச்சங்க சிதம்பரம் அனைத்து காய்கறி வியாபாரிகள் சார்பில் சிதம்பரம் நகராட்சிக்கு சொந்தமான மேல வீதியில் இடத்திலேயே இயங்குவதாகவும் மார்க்கெட் வளாகத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும் முடிவை கைவிட வலியுறுத்தி காய்கனி மார்க்கெட் மற்றும் சிதம்பரம் அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் முழு கடை அடைப்பு நடைபெற்றது.
தற்போது உள்ள சூழ்நிலையில் காய்கனி மார்க்கெட் மிகவும் குறுகலாகவும் பாழடைந்து உள்ளதாக நகராட்சி நிர்வாகம் புதிதாக காய்கறி மார்க்கெட் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது நகராட்சிக்கு சொந்தமான சுமார் 50க்கு மேற்பட்ட கடைகள் உள்ளன மீதம் உள்ள நூறு கடைகள் அது தனியாருக்கு சொந்தமான இடத்திலேயே இயங்குகிறது 50 பேர் கொண்ட கடையை மாற்றினால் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என்று இதற்கு நகராட்சி நிர்வாகமும் நகரமன்ற தலைவர் அமைச்சர்களுக்கும் தெரியும் வகையில் ஒருநாள் கடையடைப்பு சங்கம் சார்பில் நடைபெற்றது. இது கருத்தில் கொண்டு மீண்டும் தங்கள் இடத்திலேயே காய்கறி கடைகளை வைக்க உதவுமாறு கேட்டுக் கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்:பாலாஜி