மயிலாடுதுறை, ஆகஸ்ட்- 07;
மயிலாடுதுறை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் திட்ட பணியாளர்கள் மற்றும் தொழில்சார் சமூக வல்லுநர்களுக்கான இணை மானியத்திட்டம் வழிகாட்டுதல், வணிகத்திட்டம் தயாரித்தல் மற்றும் தொழில் கடன் இணையதள விண்ணப்பம் பதிவேற்றம் குறித்த பயிற்சி நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி & செம்பனார்கோவில் வட்டாரங்களில் 94 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட
வட்டாரங்களில் ஊரக தொழில் முனைவுகள் உருவாக்குதல், நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் நோக்கமாகும்.
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் திட்ட பணியாளர்கள் மற்றும் தொழில்சார் சமூக வல்லுநர்களுக்கான இணை மானியத்திட்டம் வழிகாட்டுதல், வணிகத்திட்டம் தயாரித்தல் மற்றும் தொழில் கடன் இணையதள விண்ணப்பம் பதிவேற்றம் குறித்த பயிற்சி ஆக்கூரில் உள்ள மகளிர் வாழ்வாதார சேவை மையத்தில்
நடைபெற்றது.
இதில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் வி.சுந்தரபாண்டியன் பயிற்சியை துவக்கிவைத்து வரவேற்று பயிற்சியின் நோக்கத்தினையும், திட்ட செயல்பாடுகளையும் பற்றி பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எம்.முத்துசாமி, மாவட்ட முன்னோடி வங்கி நிதிசார் கல்வி ஆலோசகர் க.சீனிவாசன், மாவட்ட தொழில் மையம் புள்ளி விபர ஆய்வாளர் இரா.சேகர், வாழ்ந்து காட்வோம் திட்ட செயல் அலுவலர் அறிவழகன் மற்றும் சீர்காழி & செம்பனார்கோவில் திட்ட பணியாளர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.