3 0
Read Time:2 Minute, 4 Second

மயிலாடுதுறை மாவட்டம்.ஆறுபாதிஊராட்சியின் விளநகர் கிராம நெடுஞ்சாலையில் ஐயனார்கோயில் வாசலில் பயனற்ற குடிநீர் மோட்டார் வெற்று அறையை மது அருந்தும் கூட்டம், மாலை, இரவு நேரங்களில், ஆக்ரமித்துத் தொல்லை கொடுத்து வந்தனர். சமூக ஆர்வலர்கள், கிராம வாசிகள், ஊர்நலன் விரும்பிகள் பலரும், பயனற்ற காலிகுடிநீர் வெற்று அறையை அகற்றுமாறு நமது அகர முதல செய்திகள் மூலம் புகாரும் ,முதல்வரின்முகவரித்துறைக்குக்கோரிக்கையும் வைத்தனர்.

இதனை தொடர்ந்து நமது செய்தியில் வெளியிட்டு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

உடனடியாக ஊரக வளர்ச்சித்துறை மூலம் நடவடிக்கை எடுத்து,பயன்பாடற்ற குடிநீர் மோட்டார் அறையை சீரமைத்து,24மணி நேரமும் வழங்கப் படும் குடிநீர் டேங்க் அறையாக மாற்றி யமைக்கப்பட்டுள்ளது. இதனால் நெடுஞ்சாலை வழி செல்வோருக்கும், கிராமவாசிகளுக்கும் மற்றும் ஐயனார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் எந்தநேரமும் குடிநீர் வசதி கிடைத்து ள்ளது. பயனற்ற காலி அறையை பொது மக்கள் நலன் கருதி,குடிநீர் வழங்கும் அறையாக மாற்றி நடவடிக்கை எடுத்த முதல்வரின் முகவரித்துறை , வட்டாரவளர்ச்சித் துறை அதிகாரிகள், ஊராட்சி மன்றத் தலைவர்,இதற்குக் காரணமாக அமைந்த சமூகநல ஆர்வலர்கள் ஆகியோருக்கு ஆறுபாதிவிளநகர் கிராமவாசிகள் உளமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %